மணப்பெண்ணையும் காதலியையும் ஒரே நேரத்தில் அதே மேடையில் திருமணம் செய்த மணமகன்.

Subscribe our YouTube Channel

மத்திய பிரதேசத்தில் தான் காதலித்த பெண்தையும் பெற்றோர் பார்த்த பெண்ணையும் ஒரே மேடையில் திருமணம் செய்த வேடிக்கையான சம்பவம் ஒன்று நிகழ்ந்தேறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பெப்துல் மவட்டத்தில் கெரிய கிராமத்தை சேர்ந்த சந்திப் என்ற இளைஞன் கோப்பாலில் படிக்கும் போது ஒரு பெண்ணைக் காதலித்துள்ளான்.

இந்நிலையில் இவனது பெற்றோர் வேறொரு பெண்ணைப் பார்த்து பேசி முடித்துள்ளனர்.முடிவில் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்த போது சந்திப் மறுப்பு தெரிவித்துள்ளார்.ஆனால் பெற்றோர் தமது முடிவில் பிடிவாதமாக இருந்ததால் சந்திப் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பஞ்சாயத்திற்கு சென்றது.சந்திப் குடும்பம்,காதலி குடும்பம்,சந்திப் பெற்றோர் பார்த்த பெண்ணின் குடும்பத்துடன் பஞ்சாயத்தார் சமரசத்தில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து இரண்டு பெண்களும் சந்திப்பினை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டனர்.அதன் பின் சந்திப்பிற்கு உறவினர்கள் புடை சூழ திருமணம் விமர்சையாக நிகழ்ந்தேறியது.