கனடாவில் வெளிநாட்டு பயணிகளுக்கான தடை நீட்டிப்பு.!

Subscribe our YouTube Channel

கனடாவில் கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டுப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இந்த ஆண்டு கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு விதிகளை அமல்படுத்தியுள்ளது.மேலும் வெளிநாட்டினர் அந்நாட்டுக்குள் வருவதற்கும் தடை விதிப்பித்திருந்தது.

இதனால் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்குகாக கனடா செல்லும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.இந்நிலையில் தற்போது மீண்டும் இம்மாத இறுதி வரை வெளிநாட்டவர்கள் வர தடை விதிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கனடிய அதிகாரிகள், கொரோனா அச்சுறுத்தலால் நிலம், கடல், வான் மற்றும் ரயில் என அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயண தடைகள் வரும் ஜூலை 31ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும்சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து பயணங்களும் மூடப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து அத்தியாவசிய காரணங்களுக்காக வருபவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுவதாகவும் அதேசமயம் கடனாவில் சிக்கியுள்ள மற்ற நாட்டவர்களை அழைத்துச் செல்ல வரும் சிறப்பு விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுவரை கனடாவில் கொரோனாவால் 67,528 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 8,591 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.