புதிய ஸ்மார்ட் போன்களுடன் இனி சார்ஜர் இருக்காது,அதிரடியாக அறிவித்த சாம்சங் நிறுவனம்.!

Subscribe our YouTube Channel

உலகில் மொபைல் விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் சாம்சங் நிறுவனத்துக்குப் போட்டி என்பது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது புதிய போன்களுடன் சார்ஜர் வழங்குவதை சாம்சங் நிறுவனம் நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.புதிய போன்கள் வாங்கும் போது அதனுடன் சார்ஜர், ஹெட்போன் உள்ளிட்ட சில அடிப்படை உபகரணங்களும் செல்போன் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்தது.

சார்ஜர் என்பது ஸ்மார்ட்போனுக்கு மிக முக்கிய தேவையாக உள்ள நிலையில், இனி வரும் நாட்களில் இவை வழங்கப்படுவது நிறுத்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.இதுவரை ஸ்மார்ட்போன்களை வாங்கும்போது பயனர்களுக்கு ஏற்கனவே சார்ஜர்கள் கிடைத்திருக்கும்.

ஆனால் இனி வரும் காலங்களில்,புதிய போன்களுக்கும் வழங்குவது தேவையற்றது என சாம்சங் கருதுவதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-வேஸ்ட் எனப்படும் எலக்ட்ரானிக் குப்பைகள் அதிகமாக சேராமல் இருக்கும் முயற்சியாகவும் இது இருக்கலாம் என நம்பப்படுகிறது.