சாத்தான்குள வழக்கில் மேலும் ஒரு திருப்பம் ! போலீசார் ஜெயராஜை அடித்து தர தர என இழுத்து சென்றனர் !! நீதிமன்றில் இன்று வழக்கறிஞர் வாக்குமூலம் !

Subscribe our YouTube Channel

சாத்தான்குடி இரட்டை மரண வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் உள்பட மூவரை ஜூலை 16வரை நீதிமன்றக் காவலில் வைக்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில்தந்தை மற்றும் மகனான ஜெயராஜ்- பென்னிக்ஸ் ஆகியோர் பொலிசாரால் சித்திரவதைக்கு உள்படுத்தப்பட்டு,உயிரிழந்தனர்.இச்சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ரகுகனேஷ் உட்பட 5பேர் பொலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் தலைமைக் காவலர் முருகன் ஆகியோரிடம் 15 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தூத்துக்குடி முதன்மைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

தொடர்ந்து ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட மூன்று பேரையும் ஜூலை 16-ஆம் தேதி வரை தூத்துக்குடி பேரூரணி சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ஹேமா உத்தரவிட்டார். மேலும்,சாத்தான்குளம் வழக்கில் துரிதமாக செயல்பட்டு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, எஸ்ஐ ரகுகணேஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயராஜை அடித்து இழுத்துச் சென்றதை பார்த்த வழக்கறிஞர்

ச ம்பவம் நடந்த ஜூன் 19 ஆம் தேதி அன்று, வேறு ஒருரு வழக்கிற் காக, சாத்தான் குளம் காவல் நிலையத்திற்கு செ ன்ற வழக்கறிஞர் களான கார்த்தீசன் மற்றும் அலெக் சாண்டரிடம், திருச் செந்தூர் அரசு விருந்தினர் மா ளிகையில் வைத்து பாரதி தாசன் விசாரணை நடத்தினார்.

ச ம்பவ நா ளில் வேறு ஒரு வழக்கிற்காக காவல் நி லையம் சென்றிருந்த போது, போலீசார் ஜெயராஜை அ டி த் து இழுத்துச் சென்றதை பார்த்ததா கவும், ஜெயராஜை போலீசார் அடித்ததை த டு த் த தன்னை கீழே தள்ளி விட்டுச் சென்றதாகவும் வழக்கறிஞர் கார்த் தீசன் வாக்கு மூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.