விடை தெரியா கேள்விகளுடன் மர்மமாய் மரணித்த சினிமா பிரபலங்கள்.!

Subscribe our YouTube Channel

ஷோபா
தென்னிந்திய திரைப்பட நடிகையான ஷோபா,’தட்டுங்கள் திறக்கப்படும்’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் ‘உத்ராத ராத்திரி’ என்ற மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவரின் இயற்பெயர் மகாலட்சுமி.இவரின் 17வது வயதில் ‘பசி’ என்ற தமிழ் திரைப்படத்தில் அவரின் சிறப்பான நடிப்பிற்காக சிறந்த நடிகை காண தேசிய விருதை பெற்றார்.

குறுகிய காலங்களிலேயே சிறந்த புகழின் உச்சத்தை அடைந்த நடிகை ஷோபா,இயக்குனர் பாலு மகேந்திராவை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.இந்நிலையில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் சடலமாக கிடந்தார் நடிகை ஷோபா.இவரின் இறப்புக்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில் புரியாத புதிராகவே உள்ளது.

சில்க் ஸ்மிதா
இந்தியாவின் ஆந்திரமாநிலம் ஏலூரு என்ற இடத்தில் பிறந்தவர் விஜயலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட சில்க் ஸ்மிதா.இவர் பிறப்பால் ஆந்திரமாநிலத்தை சேர்ந்தவராயினும் இவரது பூர்வீகம் தமிழ் நாட்டின் கரூர் ஆகும்.இவர் வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை நான்காம் வகுப்போடு நிறுத்தி கொண்டார். இவரது குடும்பவாழ்க்கையில் ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக இவர் சென்னைக்கு பிழைப்பு தேடியும் புது வாழ்க்கை தேடியும் ஓடிவந்து இவரது உறவினர் வீட்டில் தங்கி,நடிகர் நடிகைகளுக்கான ஒப்பனை கலைஞராக பணி புரிந்தார்.

பின் தமிழ் நடிகரும் இயக்குனருமான வினுச்சக்ரவர்த்தியின் மூலம் வண்டிச்சக்கரம் என்கிற ஒரு தமிழ் திரைப்படத்தில் சில்க் என்கிற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தில் இவரை ஸ்மிதா என்கிற புது புனைப்பெயரில் அறிமுகப்படுத்தினார்.வினுச்சக்கரவர்த்தியின் மனைவி சில்கிற்கு ஆங்கிலம் பயிற்றுவித்தார். அதே நேரத்தில் சில்க் வேறு ஒருவரிடம் நடனமும் கற்றுகொண்டார். வண்டிச்சக்கரத்தில் நடித்த பின் இவரது கதாபாத்திரமான சில்க் என்கிற பெயரும் ஸ்மிதா என்கிற பெயரும் இணைந்து இவரது அடையாளம் ஆயின.

இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.இவருக்காக முன்னணி நடிகர்கள் காத்திருக்கும் அளவுக்கு புகழின் உச்சிக்கே சென்றார் சில்க்.இவர் நடிப்பில் பல பரிமாணங்கள் கடந்திருந்தாலும் இவரை நாளிதழ்களும் சில திரைப்படங்களும் கவர்ச்சி நடிகையாகவே அடையாளப்படுத்தின.இருப்பினும், அலைகள் ஓய்வதில்லை(1981), நீங்கள் கேட்டவை, தாலாட்டு கேக்குதம்மா போன்ற திரைப்படங்களில் இவர் ஏற்று நடித்த நல்ல கதாபத்திரங்களின் மூலம் தனக்கு கவர்ச்சி மட்டுமின்றி அனைத்துவிதமான நடிப்பின் பரிணாமங்களும் வரும் என நிரூபித்தார்.

இந்நிலையில்,1996இல், ஸ்மிதா சென்னையில் அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். ஸ்மிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானது. இந்த நிகழ்விற்கு முன்பு இவர் திரைப்படத் தயாரிப்பாளராக முயற்சித்து வந்ததாகவும் அதில் ஏற்பட்ட கடனாலும், மேலும் காதல் தோல்வியினால் ஏற்பட்ட குடிப்பழக்கத்தினாலும், மன இறுக்கத்திற்கு ஆளானதாககூறப்பட்டது. இன்று வரை இவரது மரணம் கொலையா தற்கொலையா என்ற விடை தெரியாமலே உள்ளது.இன்னும் இவரது மரணத்தினை பற்றிய பல சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

கலாபவன் மணி
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் சாலக்குடியில் பிறந்த கலாபவன் மணி,மலையாள திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பு மூவிருளி ஓட்டுநராகவும் பணியாற்றியுள்ளார். “வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும்” என்ற திரைப்படத்தில் நடித்ததிற்காக 2000ஆம் ஆண்டில் கேரள அரசின் திரைப்பட விருதை பெற்றுள்ளார்.மேலும் தென்னிந்தியத் திரைப்பட நடிகராகவும் பாடகராகவும் வலம் வந்த இவர் மலையாளத் திரைப்படங்களில்மட்டுமல்லாது தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மலையாளத் திரைப்படங்களில் நாயகனாகவும், தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் எதிர்நாயகனாகவும் நடித்துள்ளார்.அவரது சிறந்த நடிப்புக்காக தேசிய விருதையும், கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருதினையும் வென்றவர்.நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருக்கும் பொது மயக்கமடைந்த அவர் உயிரிழந்தார்.பிரேத பரிசோதனை அறிக்கையில்,அவரின் உடலில் பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதாக கண்டறியப்பட்டது.இருப்பினும் சிபிஐ விசாரணைக்கு பிறகு கலாபவன் மணி கொலை செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

ஸ்ரீதேவி
தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம், மீனம்பட்டியில் அய்யப்பன் – இராஜேஸ்வரி தம்பதியருக்கு 13 ஓகஸ்ட் 1963 ல் பிறந்தார் நடிகை ஸ்ரீதேவி.இவர் தமிழ், தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார். தனது நடிப்பிற்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் வென்றார். கதாநாயகியாக இவர் நடித்த முதல் படம் கே. பாலச்சந்தரின் மூன்று முடிச்சு (1976). ஆரம்ப காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார்.

இது வரை 300 படங்களில் நடித்துள்ளார். கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.ஸ்ரீதேவி பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னக மொழிப் படங்களில் நடித்துப் பெரும் புகழ்பெற்ற பின்னர்,1980களின் தொடக்கத்தில் பாலிவுட் சென்று மிகப் பெரிய வெற்றிகளைக் கண்டார்.

1980களின் தொடக்கத்தில் அவர் நடித்த இந்திப் படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் எனப் பெயர்ப் பெற்றார்.2018 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ம் நாள் சனிக்கிழமை இரவு துபாயில் மாரடைப்பு காரணமாக காலமானார் என்று செய்திகள் வெளியானது. பின்னர் வெளியான பிணக்கூற்று அறிக்கை, அவர் நீரில் மூழ்கி இறந்ததாகவும், அவரது குருதியில் மதுபானம் இருந்ததாகவும் கூறியது.

உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட அவரது உடலானது பெப்ரவரி 27, 2018 அன்று தனி விமானம் மூலம் துபாயிலிருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டது.பின் இவரது உடலை பெப்ரவரி 28, 2018 அன்று மும்பையில் உள்ள வில்லே பார்லே மின்மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.இவரது மரணம் தொடர்பான சர்ச்சை கருத்துக்கள் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

மோனல்.
கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த “பார்வை ஒன்றே போதுமே” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் மோனல்.விஜயுடன் நடிக்கும் அளவுக்கு விறுவிறுவென வளர்ந்த மோனல் கடந்த 2002ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.நடன இயக்குனர் கலா மாஸ்டரின் தம்பியான பிரசன்னாவை காதலித்து வந்தார் இவர்களின் காதலுக்கு கலா மாஸ்டரின் வீட்டார் ஏற்றுக் கொள்ளாததால் பிரசன்னா, மோனலின் காதலை முறித்துவிட்டதாக கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த மோனல் மோனல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவரின் மரணம் பற்றிய தாவல்களும் மர்மமாகவே உள்ளது.

குணால்
காதலர் தினம் திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் குணால்.மும்பையைச் சேர்ந்த இவர் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மாடலிங் செய்து வந்தார். தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாது இந்தி படங்களிலும் குணால் நடித்தார். “தில் ஹை தில் மெய்ன்” என்ற படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார்.இந்நிலையில் இவர் பெப்ரவரி 7, 2008 இல் (பெப்ரவரி 6 நள்ளிரவில்) மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். திருமணமான அவருக்கு மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.இவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற சரியான காரணம் இன்னும் வெளிவராமலே உள்ளது.

சௌந்தர்யா
தென்னிந்தியத் திரைப்பட நடிகையான சௌந்தர்யா ‘பொன்னுமணி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் முன்னணி கதாநாயகர்கள் பலருடனும் நடித்துள்ளார். ரஜினிகாந்த்துடன் அருணாச்சலம், படையப்பா ஆகிய திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.மேலும் 2004ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள உலங்கு வானூர்தியில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் இறந்தார். மேலும் அப்போது அவர் 2மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்பட்டது. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவரின் மரணமும் சத்திய விபத்தா என்ற கேள்வியிலேயே உள்ளது.

பிரதீயூசா
இந்தியாவைச் சேர்ந்த தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட நடிகையான பிரதீயூசா,தெலங்கானா மாநிலம் ப்ஹோன்கிரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார்.தொலைக்காட்சி நட்சத்திரம் 2000 என்ற போட்டியில் பிரதியூசா கலந்து கொண்டு மிஸ். லவ்லி ஸ்மைல்.என்ற பட்டத்தை வென்றார்..அவரது இந்த வெற்றி திரைப்பட உலகிற்கு அழைத்துச் சென்றது. நடிகர் முரளியுடன் ‘மனுநீதி’, பிரபுவுடன் ‘சூப்பர் குடும்பம்’, விஜயகாந்த்துடன் ‘தவசி’ உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். 2004 ஆம் ஆண்டு நடிகர் சத்தியராஜின்சவுண்ட் பார்ட்டி படத்தில் நடித்து தாமதமாக வெளிவந்தது. இருப்பினும் இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றன.ஒரு கன்னட படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார்.ஆனால் அதற்கு முன் அவர் இறந்துவிட்டார்.

அவரின் காதலுக்கு விட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காதலனுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்றார்.காதலன் உயிர் பிழைக்கவே இவர் மரணமடைந்தார்.பிரதியூசா இறந்து 15 ஆண்டுகள் கழித்து அவரது தாயார் சரோஜினி் தேவி தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், கழுத்தில் நகக்கீரல்கள் இருந்ததால் கூட்டுப் பாலியல் வன்புணா்வு செய்து கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததார். இதனால் பிரதியூசா மரண விவகாரம் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டது.இவரது மரணம் இன்றும் மர்மமான முறையிலே உள்ளது.

ஷோபனா
திருச்சியைச் சேர்ந்தவர்நகைச்சுவை நடிகை ஷோபனா.இவர் நடிகர் வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் பல படங்களில் ஜோடியாக நடித்துவர்.திருமணமாகாத இவர், தனது தாயார் வைரம்ராணியுடன் கோட்டூர்புரம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் ‘எச்’ பிளாக்கில் வசித்து வந்தார்.இந்நிலையில் தாய் வெளியே சென்ற சமயம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவரின் மரணத்துக்கு காதல் தோல்வியே காரணமாக சொல்லப்பட்ட நிலையில் அது குறித்த சரியான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.

சுஷாந்த் சிங் ராஜ்புட்

இந்திய திரைப்பட பிரபல நடிகர், நடன மாஸ்டர் மற்றும் பிரபல தொழிலதிபர் ஆவார். இவர் 2008ம் ஆண்டு ஹிந்தி தொலைக்காட்சியில் பிரபல நாடக தொடரில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். பின்னர் பல ஆண்டுகளுக்கு பின் கடின முயற்சி மற்றும் தனது புகழினை கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பினை பெற்று ஹிந்தி திரைப்படங்களில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்து ஹிந்தி மற்றும் இந்திய திரையில் பிரபலமானார்.

சுஷாந்த் சிங் தமிழில் புகழ் பெற்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்ற்று படத்தில் நடித்ததன் மூலம் இந்திய திரையுலகம் அறியும் நடிகராக வளர்ந்தார்.குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றிகளை அனுபவித்த சுஷாந்த் சிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.இவரின் மரணம் பற்றிய செய்திகள் இன்றுவரை தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.