கொரோனா தடுப்பூசி ஆய்வகங்களில் சைபர் தாக்குதல் மேற்கொள்ளும் ரஷ்ய உளவாளிகள்.!

Subscribe our YouTube Channel

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில்,கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை கண்டறியும் நோக்கில் அமேரிக்கா,கனடா இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில் கோவிட் 19 க்கு தடுப்பூசி கண்டு பிடித்து விட்டதாகவும் மனிதர்களின் மேல் செலுத்தி 2வது முறையும் வெற்றி கண்டதாகவும் அறிவித்திருந்தது ரஷ்யா.

இந்நிலையில்,அமேரிக்கா,கனடா,இங்கிலாந்து ஆகிய நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில்,தடுப்பு மருந்து தயாரிக்கப்படும் ஆய்வகங்கள் மீது ரஷ்யா சைபர் தாக்குதலில் ஈடுபட்டு தடுப்பு மருந்துகளை திருடும் முயற்சியில் ரஷ்ய ஹேக்கர் குழுவினர் இறங்கியுள்ளதாக இம்மூன்று நாடுகளும் குற்றம் சாட்டியுள்ளன.

மேலும்,கொரோனா வைரஸ் மருந்து தயாரிக்கும் ஆய்வக கணனிகளை ஹேக் செய்து அறிவு திருட்டில் ஈடுபட்டு வருவதாக இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் கடந்த வியாழனன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையினை கனடாவின் தகவல் தொடர்பு பாதுகாப்பு ஸ்தாபனம்(CSE ), அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை,சைபர் பாதுகாப்பு உள்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனம்(CISA ),மற்றும் தேசிய பாதுகாப்பு நிறுவனம்,இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் ஆகியவை வெளியிட்டுள்ளன.

குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,’பிரபுக்கள்’அல்லது ‘வசதியான கரடி’என்ற பெயரில் அழைக்கப்படும் ஏபிடி29 என்ற ரஷ்ய ஹேக்கிங் குழு இந்த மாதிரியான வேளையில் ஈடுபட்டுள்ளது. அரசாங்கம்,அறிவுத்தளம் இராஜதந்திரம்,சுகாதாரம் மற்றும் எரிசக்தி ஆகியவற்றை இலக்காக கொண்டு அறிவுசார் சொத்துக்களை திருடுகிறது.

எனவே தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிறுவனங்களை தொடர்ந்து குறிவைக்கும் இந்த அச்சுறுத்தலை தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும்.இப்பகுப்பாய்வை கனேடிய தகவல் தொடர்பு பாதுகாப்பு நிறுவனம்,அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை,சைபர் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனம், உள்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனம்,மற்றும் தேசிய பாதுகாப்பு நிறுவனம் ஆகியோரும் ஆதரிக்கின்றனர் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.