அமெரிக்காவில் 30 லட்சத்தை தாண்டிய கொரோனா நோயாளிகள்.!

Subscribe our YouTube Channel

அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது.அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது.கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 51ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31லட்சத்து 48 ஆயிரமாக உயர்ந்துள்ளது.நேற்று ஒரே நாளில் 750க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.இதனால் பலியானோர் எண்ணிக்கை 1லட்சத்து 34ஆயிரத்தை தாண்டியது.13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சிகிக்சை முசிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் 16 ஆயிரம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 15 ஆயிரம் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.