“கொரோனா தடுப்பு மருந்தில் அவசரம் வேண்டாம்” நிபுணர்கள் எச்சரிக்கையும் ஐசிஎம்ஆரின் பதிலும்.!

Subscribe our YouTube Channel

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை தாக்கி வருகிறது.இந்நிலையில் கொரோனாவுக்கான ‘கோவாக்சின்’ என்ற தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம்,இந்திய மருத்துவ கவுன்சிலுடன் சேர்ந்து கண்டு பிடித்து விட்டதாக அறிவித்திருந்த நிலையில் மனிதர்களில் பரிசோதனை மேற்கொள்ள ஒப்புதலும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 15ம் திகதிக்குள் வெளியிட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், இந்த விஷயத்தில் அவசரம் கூடாது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 12 மருத்துவ நிறுவனங்கள் மற்றும் மருத்துவ மனைகளில் மனிதர்களின் உடலில் செலுத்தி இந்த மருந்து பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

சுதந்திரதினத்தில் புதிய மருந்தை அறிமுகம் செய்வ போவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நேற்று முன்தினம் அறிவித்தது.

இது குறித்து அவசரம் காட்ட வேண்டாம் என பிரபல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்கள் தொற்று நோய் விஞ்ஞானிகள்ஆகியோர் அறிவுறித்தியுள்ளனர்.

இது குறித்து வைராலஜிஸ்ட் ஷாமீத் ஜமீல் கூறுகையில்,‘நான்கு வாரங்களில் தடுப்பூசி சோதனையை வேகமாக கண்காணித்தல் என்பது சாத்தியமில்லாதது’ என கூறினார்.

நோயெதிர்ப்பு நிபுணர் சத்திய ஜித் ராத் கூறுகையில்,”தடுப்பூசியின் முதல்கட்ட சோதனைகள் சிறிய அளவிலானவை. தடுப்பூசி மனிதர்களுக்கு பாதுகாப்பானதா என்பதை மட்டுமே இதில் மதிப்பீடு செய்ய முடியும். ஆனால் இரண்டாவது கட்ட சோதனை என்பது பல நூறு பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.

மேலும் முக்கியமாக செயல்திறனை மதிப்பிடுவதற்கு உதவும். இறுதி கட்டத்தில் தடுப்பூசியின் செயல்திறனை ஒரு குறிப்பிட்ட காலத்தில் மதிப்பீடு செய்வது என்பது பல ஆயிரம் மக்களை உள்ளடக்கியது. இது பல மாதங்கள் நீடிக்கலாம் என்றார்.

நிபுணர்களின் கருத்துக்கு பதிலளித்த ஐசிஎம்ஆர்,
உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகள், வழிமுறைகளைப் பின்பற்றியே வாக்சின் சோதனைகள் நடைபெற்று வருகிறது.ஆனால் விதிமுறைகள், வழிமுறைகள் என்று எப்போதும் பார்த்துக் கொண்டு அதுவே கண்டுப்பிடிப்புக்கு இடையூறாகி விடக்கூடாது என்பதாலும் கோப்புகள் மெதுவாக நகருவதைத் தடுக்கவும் சுருக்கமாக ‘ரெட் டேப்’ தவிர்க்கவுமே இறுதிக்கெடு அளிக்கப்பட்டுள்ளது, என்று விளக்கமளித்துள்ளது.

மேலும் ஆகஸ்ட் 15 ஏன் இறுதிக்கெடுவாக சொல்லப்பட்டது என்பது குறித்து ஐசிஎம்ஆர் விளக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.