பாலியல் வழக்கை விசாரிக்காமல் இருக்க லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ அதிரடி கைது.!

Subscribe our YouTube Channel

குஜராத் மாநிலத்தின் மேற்கு அகமதாபாத்தின் மகளிர் காவல்நிலையத்தில் பொறுப்பாளராகஇருப்பவர் எஸ்.ஐ ஸ்வேதா ஜடேஜா.இவர் பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளியிடம் வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ 20 லட்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளர் கேனல்ஷா. இவரின் சகோதரரிடம் 35 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக ஸ்வேதா மீது குற்றச்சாட்டு எழுந்தது.இது குறித்து அவர்மீது சமூக எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிவுசெய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், எஸ்.ஐ ஸ்வேதா ஜடேஜா 20 லட்ச ரூபாயை வாங்குவதற்கு தரகர் மூலமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் கூடுதலாக 35 லட்ச ரூபாய் கேட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர் பிப்ரவரி மாதத்தில் 20 லட்ச ரூபாய் ஸ்வேதாவிடம் கொடுத்துள்ளார். மீதி பணத்தை விரைவில் தரவேண்டும் என்று ஸ்வேதா வலியுறுத்தியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.