முகநூல் மூலம் காவலருடன் ஏற்பட்ட காதல்.! காவலர் தன்னை ஏமாற்றியாதல் மனமுடைந்த பெண் பொலிஸில் புகார்.!

Subscribe our YouTube Channel

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே காவலர் ஒருவர் தன்னை காதலித்து திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாக இளம் பெண் புகாரளித்துள்ளார்.இராஜபாளையம் அடுத்த மேல இராஜகுலஇராமன் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் ஆலங்குளம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் நடுசூரன்குடியைச் சேர்ந்த பெண்ஒருவரை முகநூல் மூலம் அறிமுகமாகி காதலித்ததாக கூறப்படுகிறது.ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்த விக்னேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

காவலரால் ஏமாற்றப்பட்டதால் மனமுடைந்த அந்த பெண் தன்னை காதலித்து ஏமாற்றிய காவலர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.