மருமகனுக்கு 67 வகையான உணவளித்து அசத்திய மாமியார்.! இணையத்தை கலக்கும் வீடியோ.!

Subscribe our YouTube Channel

வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு அன்போடு உணவளித்து அனுப்பும் பழக்கம் தமிழர்களுக்கு உண்டு.நெருக்கமான உறவுகள் என்றால் கவனிப்பு இன்னும் கூடுதலாக இருக்கும்.இந்நிலையில் ஆந்திராவில் மாமியார் தன் மருமகனை உபசரிக்க 67 வகையான உணவுகளை சமைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

முதன்முறையாக வீட்டுக்கு வரும் மருமகனை முதல் மதிய உணவிற்கு அழைத்துள்ளார். அவரை அறுசுவை உணவுகளுடன் வரவேற்க எண்ணி 67 வகையான உணவுகளை சமைத்துள்ளார்.அதை வீடியோவாக எடுத்து twitter ல் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.உணவில் அவர் வரவேற்பு தேநீர் தொடங்கி உணவிற்குப் பின் மென்று சாப்பிட பீடா வரை சமைத்துள்ளார். அந்த உணவுகள் அத்தனையும் ஊட்டச்சத்து மிக்கதாக சமைத்து அசத்தியுள்ளார் என்பதே சிறப்பு