பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவுக்கு கொரோனா தொற்று உறுதி..!

Subscribe our YouTube Channel

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸானது உலக நாடுகள் அனைத்திலும் மிக வேகமாக பரவி வருகிறது.இந்நிலையில், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.கடந்த திங்கள் வரை அங்கு 16 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்,பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்ட பிறகு அவருக்கு திங்கட்கிழமை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கொரோனா நோய்த் தொற்று பிரேசிலில் தீவிரமாக பரவிக் கொண்டிருந்த போது,சமூக விலகல் அறிவுரைகளை கண்டுகொள்ளாமல் தனது ஆதரவாளர்களுடன் தலைநகர் பிரேசிலியாவில் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டது சர்ச்சையைக் கிளப்பியது.

இதுமட்டுமின்றி,தொடக்கத்திலிருந்தே முடக்க நிலைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வந்த பொல்சனாரூ, சமூக முடக்கம் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்துவிடும் என வாதிட்டார்.

மேலும்’கொரோனா வைரசானது கிட்டத்தட்ட ஒரு சாதாரண காய்ச்சல் போன்றது தான்”என கூறிவந்த பொல்சனாரூ, தனக்கு கொரோனா வைரசால் எந்த பாதிப்பும் இல்லை என முன்பு கூறியிருந்தார்.மேலும் முக கவசம் அணிவதையும் தவித்து வந்த பொல்சனாரூ, பொது இடங்களில் முக கவசம் அணியாமலும் தோன்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.