அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக போர்விமானத்தை இயக்க தேர்வு செய்யப்பட்ட முதல் கறுப்பின பெண்.!

Subscribe our YouTube Channel

அமெரிக்க கடற்படை வரலாற்றில் முதன் முறையாக போர் விமானத்தை இயக்குவதற்கு கறுப்பின பெண் பைலட்டாக தெரிவாகியுள்ளார்.கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்க கடற்படை பயிற்சி மையத்தில் பட்டப் படிப்பை முடித்து கடற்படை விமானப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார்.

மேட்லைன் ஸ்வெகிள் என்ற அந்தபெண் இந்த மாத இறுதியில் “தங்கத்தின் சிறகுகள்”என்று அழைக்கப்படும் விமான அதிகாரி அடையாளத்தை பெறுவார் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

வர்ஜீனியா மாகாணம் பர்க் நகரைச் சேர்ந்த மேட்லைன் ஸ்வெகிள் கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்க கடற்படை அகாடமியில் பட்டம் பெற்றார்.அதனை தொடர்ந்து 3 ஆண்டு கால தீவிர பயிற்சிக்குப் பிறகு தற்போது அவர் போர் விமானத்தின் விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.