பிரான்ஸ் தேர்தலில் வெற்றி பெற்ற ஈழத் தமிழ் யுவதி.!

Subscribe our YouTube Channel

பிரான்சில் இடம்பெற்ற 93வது மாநகரசபைத்தேர்தலில் தமிழ் யுவதி பிரபாகரன் பிறேமி வெற்றிபெற்றுள்ளார் . ‘பொண்டி’மாநகரசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு பலரும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

பிரான்சில் நடைபெற்ற மாநகர சபைத் தேர்தலில் Ile de France பிராந்தியத்தின் பல இடங்களில் தமிழர்களும் களம் இறங்கியிருந்தனர்.

இந்நிலையில், போட்டியிட்ட தமிழர்களில் பலரும் உறுப்பினராக தெரிவாகும் வாய்ப்பை இழந்துள்ளனர். இருப்பினும் அவர்கள் சார்ந்த இடது மற்றும் வலது சாரிக் கட்சிகளின் வேட்பாளர்கள் பல நகர சபைகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.