60 நாட்களாக தொடர்ந்து தூங்கும் இளம் பெண்..! காரணத்தை கேட்டால் அதிர்ந்து போவீர்கள் ! VIDEO

Subscribe our YouTube Channel

கொலம்பியா நாட்டில் 17 வயது இளம் பெண்ணான ஹரிக் டோஹர் வசித்து வருகின்றார். இவர் ஹெல்லிங் லெவன் என்ற நோயினால் பாதிக்கப்படடுள்ளார் . இந்த நோய் காரணமாக இவர் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களாக தூக்கத்திலேயே இருந்து வருகின்றார்.

இவரைப்போன்றே உலகமெங்கும் 40 நோயாளிகள் தொடர்ந்து தூக்கத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் உணவுப் பொருட்களை திரவமாக மாற்றி இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை அவரது தாயார் வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த முறை ஹரிக் தொடர்ந்து 48 நாட்கள் தூங்கியதாகவும் அதன் பின்னர் அவர்அனைத்தையும் மறந்து போனதாகவும் தன்னையே யாரென்று கேடடதாகவும் அவரது தாயார் கூறியுள்ளார். தேசிய சுகாதார மையத்திலிருந்து திரவ உணவுகளைக் கேட்டதாகவும், நரம்பியல் சிகிச்சை அளிக்குமாறும் கேட்டுக் கொள்வதாக அவரது தாயார் கூறியுள்ளார்.

ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக தேசிய சுகாதார மையத்திலிருந்து உணவுப்பொருட்கள் வருவதில்லை.என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இளம் பெண்ணின் விநோதமான நோயானது கொலம்பியா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.