பாராசிடமால் மாத்திரைகளை மருந்துக் கடைகளில் விற்பது குறித்து தமிழக அரசு விளக்கம்.!

Subscribe our YouTube Channel

மருந்துக் கடைகளில் பாராசிடமால் மாத்திரைகளை விற்க தடை விதிக்கப்படவில்லையென தமிழக அரசு தெரிவித்துள்ளது.மதுரையைச் சேர்ந்த ஜோயல் சுகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில்,”தற்போது கொரோனா பரவும் காலமாக இருப்பதால் சாதாரண காய்ச்சல் தலைவலி போன்றவற்றுக்கு மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவது கடினமான காரியமாக உள்ளது.மருந்துக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் பிரிவின்படி பாரசிடமால் போன்ற மருந்துகள்,மருத்துவர் பரிந்துரையின்றி வாங்கக் கூடியவை.

ஆனால்,தமிழக அரசின் அதிகாரிகள் அந்த மருந்துகளை பரிந்துரையின்றி விற்கக்கூடாது என மருந்துக் கடைகளுக்கு வாய்மொழியாக கூறியிருப்பதால்,அவற்றை விற்க மருந்துக் கடைக்காரர்கள் தயங்குகிறார்கள்.

மேலும், காய்ச்சலுக்காக மாத்திரை வாங்க வருபவர்கள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் தெரிவிப்பதால், அவர்கள் சாதாரண காய்ச்சல் வந்தவர்களையும் கோவிட் மையங்களில் சேர்க்கிறார்கள். ஆகவே,பாரசிடமால் போன்ற சாதாரண காய்ச்சல் மருந்துகளை மருந்துக் கடைகளில் விற்க அனுமதிக்க வேண்டும்” என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தது.மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.தமிழக அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,இம்மாதிரி தடை எதையும் தமிழக அரசு விதிக்கவில்லை என தெரிவித்தார்.இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை முடித்து உத்தரவிட்டது.