‘நிஜவுலகின் கதாநாயகன்’Sonu Sood-க்கு இப்படி ஒரு சோகமா.?

Subscribe our YouTube Channel

நடிகர் சோனு சூட் நேற்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடினர்.இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி பஞ்சாபி கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் வில்லனாகவும் குணர்ச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். திரைப்படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜத்தில் கதாநாயகனாகவே வளம் வருகிறார். ஆம்,கொரோனா காலகட்டத்தில் மக்கள் பலரும் பல வழிகளில் இன்னல்களுக்கு ஆளாகி வரும் இந்த காலகட்டத்தில்,அவர்களுக்கு நேரடியாக தகுந்த உதவிகளை செய்து வருகிறார்.புனேவில் சிலம்பம் சுற்றி வாழ்க்கையை ஓட்டி வந்த மூதாட்டிக்கு தற்காப்பு பள்ளி அமைத்து கொடுத்தார்.

ஆந்திராவில் மகள்களை ஏரில் புட்டி வயல் உழுத ஏழை விவசாயிக்கு ட்ராக்டெர் வாங்கி கொடுத்த்தார்.IT வேலையை இழந்து மரக்கறி விற்று வந்த இளம்பெண்ணுக்கு வேலை வாய்ப்பு கொடுத்த்தார்.இவரது உதவிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்று பல திரைப் பிரபலங்கள் இரசிகர்கள் என பலரது வாழ்த்துக்களை பெரும் சோனு சூட்,ஒரு காலத்தில் அருகில் யாருமில்லாமல்,மனக்கஷ்டங்களை சொல்வதற்கு யாரும் இல்லாமல் இருந்த தருணங்களும் உண்டு.

1998,1999 காலப்பகுதிகளில் பிறந்தநாள்களின் போது பாலத்தின் மீது வேதனையில் அழுத நாட்களும் உண்டு என கூறியிருக்கிறார். ஆனால் இப்பொழுது தன்னுடைய பிறந்த தினத்தை பலர் கொண்டாடுகிறார்கள்.இது தனக்கு உலகமே தன்னுடைய பிறந்த தினத்தை கொண்டாடுவதாக உணர்கிறேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.