சீன அதிபருக்கு அதிகரிக்கும் சவால்கள்.!சொந்த கட்சிக்குள்ளேயே உருவாக்கும் நெருக்கடி.!

Subscribe our YouTube Channel

சீன அதிபரின் சொந்த கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளேயே அதிபருக்கு சவால்கள் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்திய சீன மோதல்,கொரோனா விவகாரம்,வீழ்ச்சியடையும் உள்நாட்டு பொருளாதாரம், உலக சுகாதார அமைப்பின் விசாரணை என்று பல்வேறு தரப்பிலும் இருந்தும் சீனா நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் பூடான் உடன் தங்களுக்கு எல்லை பிரச்னை உள்ளதாக முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக சீனா தெரிவித்துள்ளது. இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பூடான் உடன் நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை உள்ளது.இதில் மூன்றாவது நபரின் தலையீடு தேவையற்றது என கூறப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக சீன அதிபர் ஷி ஜின்பிங் கடும் சவால்களை சந்தித்து வருகிறார். கொரோனா விவகாரத்தை எதிர்கொள்வதிலும், பொருளாதாரம் மற்றும் சர்வதேச உறவுகளைகையாள்வதிழும் பல சிக்கல்களை சந்தித்து வருகிறார்.

கொரோனாவுக்கு பிறகும் பொருளாதாரம் வலுவாக உள்ளது என்பதை காட்டுவதற்காகவும், சர்வதேச அரங்கில் எழுந்துள்ள பிரச்னைகளை எதிர்கொள்வதற்காகவுமே இந்தியா உடனான எல்லை விவகாரத்தை அவர் கையில் எடுத்துள்ளதாக கருதப்படுகிறது.

ஆனாலும் அதிபரின் நடவடிக்கைகள் அவருக்கு மேலும் நெருக்கடியையே ஏற்படுத்தியுள்ளதாகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளேயே அவருக்கு பல சவால்கள் உருவாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.