கொரோனா நோயாளர்களுக்கான புதிய ரக பேட்டரி வாகனம் அறிமுகம்.!

Subscribe our YouTube Channel

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் நாளாந்தம் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் நோயாளிகளை அழைத்து செல்ல புதிய ரக பேட்டரி வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவ மனையில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளர்களை பாதுகாப்பாக ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல பேட்டரி கார் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த பேட்டரி வாகனமானது மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் சுமார் 7லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன்சிலிண்டர் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.