தனிமையை போக்க மரங்களை கட்டித் தழுவும் இஸ்ரேலிய மக்கள்.!

Subscribe our YouTube Channel

கொரோனாவின் காரணமாக ஏற்பட்டுள்ள தனிமையை போக்க மரங்களை கட்டித் தழுவிக் கொள்ளும் இஸ்ரேலியர்கள்.உலக நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வரும் வேளையில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளால் பல்வேறு நாடுகளில் மக்கள் தனிமையை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேலில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து தனிமையால் வாடும் மக்களிடம், மரங்களிடம் அன்பு செலுத்துமாறு அப்போலோனியா தேசிய பூங்கா ஊழியர்களால் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் விளைவால் அனைத்து வயதினரும் மரங்களை கட்டியணைத்து ஆறுதல் அடைகின்றனர்.’கொரோனா பரவலால் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் எங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை கட்டியைணைக்க முடியவில்லை. மரங்களை கட்டியணைப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது’என அந்நாட்டு மக்கள் கருத்து தெரிவிக்கிக்கிறார்கள்.