தலைமை காவலர் ரேவதிக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.!

Subscribe our YouTube Channel

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் இரட்டை மரண வழக்கில் துணிச்சலாக மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் சாட்சி சொன்ன தலைமை காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணை நடத்திய மேஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் முன்னிலையில் சாத்தான்குளம் காவல்நிலைய தலைமை காவலர் ரேவதி சாட்சியளித்தார்.மேலும் இவ்வாறு சாட்சியளிப்பதால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு தேவை எனவும் முறையிட்டிருந்தார்.

பல்வேறு அரசியல் தலைவர்களும் தலைமை காவலர் ரேவதிக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை சாத்தான்குளம் தலைமை காவலர் ரேவதிக்கு பாதுகாப்பு வழங்கவும், ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.