“கலக்கப்போவது யாரு” பிரபலம் யோகிக்கு காதல் திருமணம்.!

Subscribe our YouTube Channel

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் யோகி.இவர் தனது பாடசாலை மற்றும் கல்லூரி தோழியான சௌந்தர்யாவை கடந்த 24ம் திகதி திருமணம் செய்து கொண்டார்.மனைவியான சௌந்தர்யா தனியார் பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இது குறித்து இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த யோகி அவர்கள்,சௌந்தர்யாவும் நானும் ஒரே பாடசாலை மற்றும் கல்லூரிகளில் ஒன்றாக படித்தோம்.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எங்கள் பாடசாலையில் பழைய மாணவர்களின் சந்திப்பு நடந்தது.

அங்கு சென்ற எனக்கு சௌந்தர்யா மீது காதல் வயப்பட்டதாக தெரிவித்துள்ளார்.மேலும் அப்போது காதலைச் சொல்ல தயங்கினேன்.காரணம் அப்போது தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டத் தொடங்கியிருந்த நேரம் என கூறினார்.

தற்போது கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலையில் தனது காதலை சௌந்தர்யாவிடம் தெரிவித்து இருவீட்டார் சம்மதத்துடன் யோகி – சௌந்தர்யா ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

கொரோனா பிரச்னை முடிவடைந்த பின்னர் தனது தொலைக்காட்சி நண்பர்களுக்கு வரவேற்பு ஏற்பாடு செய்து விருந்தளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் யோகி தெரிவித்துள்ளார்.