பிரித்தானியாவில் 3 நாட்களாக காணாமல் போன இளம் பெண் குறித்து பெற்றோரின் நெகிழ்ச்சி பதிவு.!

Subscribe our YouTube Channel

பிரித்தானியாவில் லெய்டன்ஸ்டோன் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்த பெண்,நடைப்பயிற்சிக்கு சென்றிருந்த நிலையில் 3 நாட்களாக வீடு திரும்பவில்லை. புருனல் பல்கலைக்கழக பட்டதாரியான 23 வயது பிரதீப் கவுர் பிளஹா என்பவரே காணாமல் போயுள்ளார்.

கடந்த புதன்கிழமை காலை சுமார் 10.30 மணியளவில்,நடைப்பயிற்சிக்கு சென்ற அவர் கூடவே செல்போனையும் எடுத்து சென்றுள்ளார்.மாயமானதிலிருந்து அவரிடமிருந்து நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ எந்த தகவலும் இல்லை என கூறப்படுகிறது.

தினமும் நடைப்பயிற்சி முடித்து 45மணிநேரத்தில் விடுதிரும்பும் அவர் 3 நாள்களாகியும் வராததால் குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.பிரதீப் கவுர் பிளஹாவின் புகைப்படத்தை வெளியிட்டு இவரை பற்றிய தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கும்படி பொது மக்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் தற்போது பெற்றோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தங்களின் கோரிக்கையை ஏற்று மனமுவந்து உதவிய அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளனர் .

மேலும் பிரதீப் கவுர் பிளஹா பத்திரமாக உள்ளார் என சமூக வலைதளத்தில் பெற்றோர் பதிவிட்டுள்ளனர்.