புதிய அம்சங்களுடன் களமிறங்கிய ஜியோ மீட்.! கூகுள் மீட், zoom உடன் அதிரடி காட்டும் ஜியோ.!

Subscribe our YouTube Channel

கொரோனா ஊரடங்கு காரணமாக உலகின் பல நாடுகளிலும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வருவாய் இழந்துள்ளன.பல நிறுவனங்களின் தொழிலாளர்கள் வீட்டில் இருந்தவாறே பணி செய்கின்றனர்.மாணவர்களுக்கு ஒன்லைன் வாயிலாக வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கு Zoom, Google Hangout போன்ற தளங்கள் இதுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இதுவரை இல்லாத அளவுக்கு இத்தலங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், வீடியோ கான்பரன்சிங் சேவைக்காக ‘ஜியோ மீட்’ என்ற பெயரில் பிரத்யேக செயலியை ஜியோ வெளியிட்டுள்ளது.

இந்த செயலி, கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் மற்றும் வின்டோஸ் மார்கெட்டில் கிடைக்கும்.செயலி இல்லாமலும், கூகுள் குரோம் மற்றும் மொஸில்லா பயர் பாக்ஸ் வழியாகவும் ஜியோ மீட் சேவையை பயன்படுத்த முடியும்.இந்திய தொழில்நுட்பத்தில் ஜியோ மீட் தயாராகியுள்ளது

ஏனைய கான்பரன்சிங் தளங்களை விட,‘ஜியோ மீட்’பிரத்யேக அம்சங்களைக் கொண்டது எனவும் ஒரே நேரத்தில் 100 பேர் வரை உரையாட முடியும் எனவும் கூறப்படுகிறது.