PUBG – யால் 16 லட்சத்தை இழந்த பெற்றோர்.! mechanic கடையில் சிறுவனை வேலைக்கு சேர்த்த தந்தை.!

Subscribe our YouTube Channel

பப்ஜி விளையாட்டானது இளைஞர்கள் சிறுவர்கள் என அனைவர் மத்தியிலும் மிகவும் பிரபலம்.பலர் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.இந்நிலையில் பப்ஜி விளையாட்டில் ஒரு சிறுவன் அவன் பெற்றோரின் வங்கி சேமிப்பையே செலவு செய்துள்ளான்.

பஞ்சாப் மாநிலத்தில் 17 வயது சிறுவன் பெற்றோரின் வங்கி பணத்திலிருந்த 16 லட்ச ரூபாயை செலவழித்துள்ளான்.அதற்காக தனது அம்மாவின் சிமார்ட் போனையே பாவித்துள்ளார்.சிறுவன் மொபைலில் அதிக நேரம் செலவிடுவதை கண்காணித்த பெற்றோர்,கேட்ட பொழுது ஒன்லைனில் பாடம் படிப்பதாக பொய் உரைத்துள்ளார். பப்ஜி விளையாட்டில் புதுபுது அத்தியாயங்களை தொடங்க சிறுவன் பெற்றோரின் மூன்று வங்கி கணக்குகளை பயன்படுத்தியுள்ளான்.

இவ்வாறு தொடர்ச்சியாக விளையாடிய சிறுவன் பெற்றோர் சேர்த்து வைத்திருந்த 16 லட்சம் ரூபாவையும் செலவளித்துள்ளார். வங்கியிலிருந்து வரும் குறுஞ்செய்திகளை உடனுக்குடன் அழித்தும் விட்டுள்ளார்.இப்பணத்தை சிறுவனின் எதிர்காலத்துக்காகவும் மருத்துவ அவசரத்துக்காகவும் பெற்றோர் சேர்த்து வைத்திருந்தனர். இச்சம்பவத்தை அறிந்த தந்தை அதிர்ச்சியடைந்தார்.

அரசு அலுவலராக அவர்,காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இழந்த பணம் மீண்டும் கிடைக்காது என காவலர்கள் கூறியுள்ளனர்.இதனை அடுத்து இருசக்கர வாகனங்கள் சீர்செய்யும் mechanic கடையில் தந்தை வேலைக்கு சேர்த்துள்ளார்.