சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக ‘எங்கே வேணும் என்றாலும் சொல்ல தயார்’ காவலர் ரேவதி அதிரடி.! VIDEO

Subscribe our YouTube Channel

தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குடியில் தந்தை மகன் பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக உயர்நிதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

சாத்தான்குளத்தில் ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததன் காரணமாக கைது செய்யப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் சிறைச்சாலையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் விசாரணையில் மனசாட்சிப்படி சாட்சியம் அளித்த சாத்தான்குளம் பெண் காவலர் ரேவதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.மேலும், சம்பவத்தன்று , இருந்த பெண் தலைமைக் காவலர் ரேவதி அங்கே நடந்த சம்பவத்தையும் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் காவலர்கள் விடிய விடிய லத்தியால் தாக்கினார்கள் என சாட்சியம் அளித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் சிசிடிவி ஆதாரங்கள், மருத்துவமனை படுக்கை ஆதாரங்கள் என பல வெளியானபோதும் காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை பார்த்தவர்கள் நேரடி சாட்சியம் அளிக்க பலரும் அச்சப்பட்டனர்.

இந்த நிலையில்தான், தலைமைக் காவலர் ரேவதி முதலில் அஞ்சிய போதும் மனசாட்சிப்படி, அன்று நடந்த சம்பவத்தை மாஜிஸ்திரேட்டிடம் சாட்சியமாக அளித்துள்ளார்.இதனால் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால், தலைமைக் காவலர் ரேவதிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் உயர் நீதிமன்றம் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து டுவிட்டரில், தலைமைக் காவலர் ரேவதியைப் பாராட்டியும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் ஹாட்ஸ் ஆஃப் ரேவதி என்றும் #revathi என்று நெட்டிசன்கள் பதிவிட்டதால் ரேவதியின் பெயர் ட்ரெண்டிங் அகி வருகிறது.