‘இராமர் இந்திய நாட்டில் பிறந்தவர் அல்ல. நேபாளத்தில் பிறந்தவர்’ நேபாள பிரதமரின் கருத்தால் சர்ச்சை.!

Subscribe our YouTube Channel

உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை. அது எங்கள் நாட்டில்தான் உள்ளது என நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அயோத்தி என்பது நேபாளத்தில் பிர்குஞ் பகுதிக்கு மேற்கில் இருக்கும் சிறிய கிராமம். அங்குதான் ராமர் பிறந்தார் என அவர் கூறி உள்ளார்.

நேபாள கவிஞர் பனுபக்தாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட நேபாள பிரதமர் கே..பி ஷர்மா ஒலி இச்சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.அவர் கூறியதாவது, அயோத்தி என்பது நேபாளத்தில் பிர்குஞ் பகுதிக்கு மேற்கில் இருக்கும் சிறிய கிராமம். அங்குதான் ராமர் பிறந்தார்.

கடவுள் ராமர் இந்திய நாட்டில் பிறந்தவர் அல்ல.நேபாள நாட்டில் பிறந்தவர்.அவர் ஒரு நேபாளி ராமர் பிறந்த உண்மையான அயோத்தி எங்கள் நாட்டில்தான் உள்ளது.இந்தியாவில் உள்ள அயோத்தியாவில் வேண்டுமானால் சர்ச்சை இருக்கலாம்,நம் அயோத்தியாவில் இல்லை என அவர் கூறி உள்ளார்.

நேபாள பிரதமரின் இக்கருத்துக்கு அந்நாட்டிலேயே எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன.இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு முன்னாள் துணை பிரதமர் கமல் தபா,இந்தியா நேபாள உறவை மேலும் சிதைக்கும் வகையில் ஷர்மா ஒலியின் பேச்சு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேபாள எழுத்தாளரான கனக் மணி தீக்‌ஷித், “இந்திய அரசுடன் முரண் இருக்கும் போது, இப்போது அந்நாட்டு மக்களுடன் முரண் ஏற்படும் வகையில் ஒலி பேசி உள்ளார்,” என கருத்து தெரிவித்துள்ளார்.