மக்களே உஷார்…அதிக அளவில் சானிடைசர் பயன்படுத்துவதால் ஆபத்து..!

Subscribe our YouTube Channel

உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸானது அச்சத்துக்குள்ளாக்கி வருகிறது.இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பல இன்னல்களுக்கு அழகை வருகின்றனர். இதிலிருந்து தப்பிக்க உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவுறுத்தி வருகின்றனர். முக கவசம் அணிதல்,அடிக்கடி கைகளை நன்றாக கழுவுதல்,சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

பல்வேறு நாடுகளில் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த நடைமுறைகளை பின்பற்றுவதால் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து நம்மை பாத்து காத்துக்கொள்ள முடியும் என நம்பப்படுகிறது.அத்துடன் மக்கள் அதிக அளவில் சானிடைசர்கள் பயன்படுத்துவதால் அதிலிருந்து நமக்கு வேறுவிதமான பாதிப்புகள் ஏற்படும் என தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

அதிக அளவில் ஆல்கஹால் கலந்த சானிடைசரரை பயன்படுத்தும் பொது கைகளில் உள்ள நல்ல பாக்டிரியாக்களையும் சேர்த்து அழித்து விடும் தன்மை கொண்டது.ஆல்கஹால் கலந்த சானிடைசர்கள் கெட்ட பாக்டிரியாக்களை அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.அதே வேளை அதனை அதிகமாக உபயோகிக்கும் போது தோல்பகுதியில் கடுமையான வறட்சி,சருமம் சிவத்து போதல்,தொழில் அலர்ஜி ஏற்படுதல் போன்ற சரும பிரச்சனைகள் அதிகம் ஏற்படும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் தற்போதைய சூழலில் அதாவது,இந்த கொரோனா தொற்றின் காரணமாக ஆல்கஹால் கலந்த சானிடைசரை பயன்படுத்துவது கட்டாயம் எனவும் சுகாதார துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.