கொரோனா ஊரடங்கிலும் யூடியூபில் சம்பாதித்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய இளைஞர்..!

Subscribe our YouTube Channel

கொரோனா ஊரடங்கினால் அனைத்து நாட்டினரும் வீட்டுக்குள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதனால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இச்சமயத்தில் பெரும்பாலானவர்கள் சுயதொழிலில் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

யூடியூபில்(youtupe) லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதெல்லாம் உண்மையென்றாலும் ஒருவர்,ஒரு ரூபாய் சம்பாதிக்க ஆரம்பிக்க பல மாதங்கள் காத்திருக்க வேண்டும்.ஏனென்றால் வருவாய்க்கான விதிகள் அப்படி.அதையும் மீறி இந்தியாவிலிருக்கும் பல்வேறு தனி நபர் யூடியூப் சேனல்களும்,குழு சேனல்களும் ஒரு பக்கம் பணம் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

எது எப்படி இருந்தாலும், இந்த சமயத்திலும் பல லட்சங்கள் சம்பாதிக்கும் சாதனையாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையை சேர்ந்தவர்தான் இந்தியாவில் பிறந்து துபாயில் செட்டிலான இளைஞர் கவுரவ் சவுத்ரி.

இவர் தொழில்நுட்பம் மற்றும் மொபைல் பற்றிய விமர்சனங்களை தனது யூடியூப் சேனலில் உடனுக்குடன் வெளியிடுபவர்.குறிப்பாக புதிய மொபைல்கள் வந்த அன்றே அதற்கான விமர்சனங்கள் இவரது சேனலில் வரும்.கிட்டத்தட்ட 35 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டிருக்கும் இவரது சேனலின் மூலம் மாதம் ரூ.20 லட்சம் வரை கவுரவ் சம்பாதித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

தற்போது துபாயில் வசித்து வரும் கவுரவ் தனது வருமானத்தை வைத்து, ரோல்ஸ் ராய்ஸ் ஆடம்பரக் காரை வாங்கியுள்ளது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதுவும் தனக்கான மாறுதல்களை நிறுவனத்திடம் கேட்டுப் பெற்றுள்ளார்.

இதன் மூலம் மாதம் 20 லட்சம் ரூபாய் வரை கவுரவ் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யூ டியூபில் சம்பாதித்த பணத்தை வைத்து சொந்தமாக ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கியிருக்கிறார் கவுரவ் . அதிலும் காரில் தனக்கான மாறுதல்களையும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திடம் கேட்டு பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.