கொரோனா காலத்திலும் பொதுப்பணி செய்து மனித நேயம் காட்டும் சேலம் மூதாட்டி.!

Subscribe our YouTube Channel

‘காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது’ என்ற வள்ளுவரின் கூற்றுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார் சேலத்தை சேர்ந்த மூதாட்டி.கொரோனா உயிரிழப்புக்களையும் பதற்றத்தினையும் ஏற்படுத்தி வரும் நிலையில் மனிதநேயம் இன்னும் மனிதர்களிடத்தில் அழியவில்லை என்பதற்கு சான்றாக 82 வயதான சேலத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் எந்தச் சோர்வுமின்றி தன் வேலைகளை தாமே செய்து வருகின்றார்.

சரோஜா என்ற இவர் தனது 25வது வயதில் தையல் கலையை பயின்றார். தற்போது வரை தையல் பணிகளைச் செய்து வருகின்றார். இத்தனை வயதிலும் கண்ணாடி அணியாமல் மிகவும் சுலபமாக நூலினை ஊசியினுள் கோர்க்கும் இவர் தற்போதைய கொரோனா காலத்தில் 1500 முகக்கவசங்களை தனது குடும்பத்தினரின் உதவியுடன் தயாரித்து ஏழை எளிய மக்கள்,துப்பரவு பணியாளர்கள்,காவல்துறையினர் போன்றோருக்கு இலவசமாக வழங்கி வருகின்றார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்த போது தன்னால் பணம் கொடுத்து உதவ முடியவில்லை என்றாலும் தன்னால் இயன்ற வரை மக்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கருதி கடந்த நான்கு மாதங்களாக தைத்து கொடுத்து வருவதாகவும் கூறினார்.காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை முகக்கவசங்களை தைக்கும் பணியில் ஈடுபடும் இவர் 5000 முகக்கவசங்களை தைத்து கொடுக்க வேண்டும் என்ற இலக்குடன் தைத்து வருகின்றார்.