‘என்னை காப்பியடிப்பதை நிறுத்தி கொள்ளுங்கள்’ த்ரிஷாவை எச்சரித்த மீரா மிதுன்.

Subscribe our YouTube Channel

என்னை காப்பியடிப்பதை நிறுத்தி கொள்ளுங்கள் என நடிகை த்ரிஷாவுக்கு பிக்பாஸ் சீஷன் 3 பிரபலம் மீரா மிதுன்,அவரது Twitter பக்கத்தில் எச்சரிக்கையாக பதிவிட்டுள்ளார்.சர்ச்சைகளின் நாயகியாக வலம் வரும் நடிகை மீரா மிதுன் தற்போது நடிகை த்ரிஷாவை வம்புக்கு இழுத்துள்ளார்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள மீரா மிதுன், இது தான் எனது கடைசி வார்னிங் என த்ரிஷாவை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.இனி என்னை போல ஹேர் ஸ்டைல்,என்னை போன்ற தோற்றம் என மார்பிங் செய்து புகைப்படங்களை நீங்கள் எடுப்பதை கண்டால் சீரியஸாக நடவடிக்கை எடுக்கப்படும் ட்வீட் செய்துள்ளார்.

மீரா மிதுனின் இந்த கருத்துக்கு நடிகை த்ரிஷாவின் ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.