சாதனைகளின் நாயகன் ஒசிட்டா ஐஹீம்!!

Subscribe our YouTube Channel

நைஜீரிய நாட்டுத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஒசிட்டா பல திரைப்படங்களில் நடித்துள்ளார், பார்ப்பதற்கு சிறுவன் போல இருக்கும் இவர் 20 பெப்ரவரி 1982ல் பிறந்தார்.

நைஜீரியாவின் இமோ மாநிலத்தில் உள்ள மாப்லட்டொலி(Mbaitoli) நகரில் Augustine Iheme மற்றும் Herbert Iheme தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவர், இனம் மொழி கடந்து உலக மக்கள் அனைவரையும் இரசனையுடன் சிரிக்க வைக்கும் திறமைசாலி .

ஓசிட்டாவுக்கு பிறவியிலேயே உடல்வளர்ச்சி பாதிக்கப்பட்டது. ஆனால் மனதளவில் மிகவும் உற்சாகமானவராகவே இருந்தார். இவருக்கு சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீதும் சினிமா மீதும் அளவுகடந்த பிரியம் கொண்டிருந்தார்.

அவரது பயணமும் அதற்க்கான படிப்பை நோக்கியே இருந்தது.தனது பள்ளிப் படிப்பை முடித்த பிறகு பக்கத்துக்கு மாநிலமான லாகோஸ் க்கு இடம்பெற்ந்த ஓசிட்டா அங்கு பட்டப்படிப்பை முடித்தார்.

சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த ஓசிட்டாவுக்கு முதலில் சிறுவன் வேடமே கிடைத்தது.18 வயது நிரம்பிய வாலிபன் சிறுவனாக நடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை.தன் கடின உழைப்பாலும் விடா முயற்சியாலும் வெற்றி பெற்றார் ஓசிட்டா.

கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் தனதாக்கி கொண்டார். 2003ம் ஆண்டு தன்னைப் போல இன்னொரு உடலால் வளர்ச்சி குன்றிய நபரான ‘சினேடு ஐகீடிஸ்’ இணைந்து சேட்டை செய்யும் சிறுவனாக ‘அகி நா உக்வா’என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இப்படம் நைஜீரியாவில் சூப்பர் ஹிட்டானது. அதனை தொடர்ந்து , சிறுவனாக மட்டுமல்லாது வயது வந்த கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கத் தொடங்கினார் ஒசிட்டா. தொடர்ந்து, வியக்கத்தக்க வகையில் நடிப்பை வெளிப்படுத்தி நைஜீரிய சினிமா உலகில் முக்கிய இடத்தையும் பிடித்தார்.

சமூகவலைத்தளங்களில் இன்று நாம் காணும் ஓசிட்டாவின் போட்டோக்களும் வீடியோக்களும் இந்த படத்தில் நடித்த காட்சிகளே. அவரின் 16வது வயதில் ‘ஆப்ரிக்காவின் ஆஸ்கார்’ என்று அறியப்படும் ஆப்பிரிக்கன் மூவி அகாடமி அவார்ட் நிகழ்வில் 1998-ம் ஆண்டு ஒசிட்டா ஐஹீமுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

‘Inspired Movement Africa’ எனும் அமைப்பை நிறுவி இளம் ஆப்பிரிக்கர்களை ஊக்குவித்து வரும் ஒசிட்டா ஐஹீம், ‘இன்ஸ்பைர்ட் 101’ என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். 2007ம் ஆண்டில் ஆப்பிரிக்க திரைப்பட விருது நிகழ்வில் வாழ்நாள் சாதனையாளர் விருது, 2014ம் ஆண்டில் ஆப்பிரிக்கா மேஜிக் வியூவர் சாய்ஸ் விருது விழாவில் சிறந்த நடிகர் விருது ஆகிய மதிப்புமிகு விருதுகளையும் பெற்றுள்ளார்.

நைஜீரிய திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு ஒசிட்டா அளித்த பங்களிப்புக்காக, 2011ஆம் ஆண்டில் ஜனாதிபதி குட்லக் ஜானதனால், கௌரவமிக்க விருதான ஃபெடரல் குடியரசின் (MFR) விருது வழங்கப்பட்டது. அரண்மனை போன்ற வீடுகள்,ஆடம்பர கார்கள் என தான் நினைத்த அனைத்தையும் அடைந்து விட்டார்.

இருப்பினும் அது குறித்து அவர் வெளியில் சொல்வதை விரும்புவதில்லை.தொழில் குறித்து யாராவது கேட்டல்,நன் திட்டமிட்ட படியே எல்லாம் நன்றாக நடக்கிறது என சுருக்கமாக பதிலளிப்பார் ஓசிட்டா.

ஓசிட்டாவின் சொந்த மாநிலமான இமோவில் உள்ள பாடசாலைகளில் சொந்த செலவில் வினாடி வினா போட்டி நடத்தி வருகிறார்.அதில் வெற்றி பெறுவோருக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கிறார். ஓசிட்டாவின் நண்பரான சினேடு ஐகீடிஸ் உடன் இணைந்து அவர்கள் நடித்து சூப்பர்கிட் படத்தின் பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார்.

இதன் மூலமாக இராமனை மாணவர்களும் இளைஞர்களும் பயனடைந்து வருகின்றனர்.இதுவரை தனக்கு கிடைத்த புகழுக்கும் பெயருக்கும் கடவுளுக்கு நன்றி கூறும் ஓசிட்டா, வரும் காலங்களில் கடவுளின் துணையோடு அரசியலிலும் ஈடுபட்டு மக்களுக்கு பல நன்மைகளை செய்ய ஆசைப்படுவதாக கூறுகிறார். Source – Aadhan Tamil / Youtube