உதடுகள்,பற்கள் என மனித முகச் சாயலில் பிடிபட்ட அரியவகை வினோத மீன்.!வைரலாகும் புகைப்படம்

Subscribe our YouTube Channel

இந்த வித்தியாசமான மற்றும் விசித்திரமான உலகில்,இயற்கையின் பேரழகையும், அதிசயத்தையும் வர்ணிக்க அழகுப்பூர்வாமான வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.இவ்வுலகில் பல நேரங்களில் பல்வேறு வினோதமான சம்பவங்கள் அதை நமக்கு உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் மனிதனின் முகம் போல் தோற்றம் கொண்ட அதிசய மீன் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மனித முகச்சாயலில் உள்ள இந்த மீன் மலேசியாவில் பிடிப்பட்டு அனைவரையும் ஆச்சரியக் கடலில் மூழ்கடித்து உள்ளது.

இந்த மீன் பார்ப்பதற்கு மனிதர்களை போல மேல் உதடு, கீழ் உதடு, பற்களை பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தை ட்விட்டர் பயனாளர் ஒருவர் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.