சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம். காதலி ரியா மீது தந்தை காவல் நிலையத்தில் புகார்.!தலைமறைவாகிய சுஷாந்தின் காதலி.!

Subscribe our YouTube Channel

பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவருடைய தற்கொலைக்கு காரணமாக பாலிவுட்டில் நடைபெறும் உள் அரசியல் மற்றும் வாரிசு அரசியல் தான் காரணம் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிக்கொண்டு இருக்கின்றன. சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம் தொடர்பாக பிரபலங்கள் உட்பட பலரையும் காவல் துறையினர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில்,இதனிடையே சுசாந்தின் காதலி என்று சொல்லப்படும் ரியா சக்ரோபாரதி மீது,சுஷாந்தின் தந்தை காவல்துறையில் புகார் அளித்திருப்பது வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகாரை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரில்,ரியா சக்ரோபாரதி,ரூபாய் 15 கோடியை சுஷாந்தை ஏமாற்றி, வேறு ஒரு அக்கவுண்ட்டுக்கு மாற்றியுள்ளதாக அவர் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

மேலும் ரியாவும் இன்னும் சிலரும் சேர்ந்து கொண்டு,தனது மகனுக்கு பொருளாதார ரீதியாகவும், மனநிலை ரீதியாகவும் அழுத்தங்கள் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு வரை சுஷாந்திற்கு எந்த மன அழுத்தமும் இருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால்,அவர் ஏன் அதை குடும்பத்திடம் இருந்து மறைக்க வேண்டும்.?

இந்த விவகாரத்தில் ரியாவேதான் மருத்துவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்.அவர் சொல்லிய மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை தான் சுஷாந்த் எடுத்து கொண்டுள்ளார்.அதனால் சுஷாந்திற்கு மருத்துவம் பார்த்ததாக சொல்லப்படும் மருத்துவர்கள் விசாரிக்கப்பட வேண்டும்.

ரியா கடைசியாக சுஷாந்திடம் இருந்து செல்லும்போது,அவரின் க்ரெடிட் கார்டு, லேப்டாப், இன்னும் சில மெடிக்கல் ஃபைல்கள் உள்ளிட்டவற்றை எடுத்து சென்றுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்,சுஷாந்த் சிங்கின் காதலி என சொல்லப்படும் ரியா தற்போது தலைமறைவாகியுள்ளார்.

இது பெரும் சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.வழக்கின் மற்றோரு புதிய திருப்பமாக பாஜகவின் முத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி,சுஷாந்த் சிங்கின் மரணம் கொலையாக இருக்கலாம் என தனது Twitter பக்கத்தில் கூறியிருப்பது விவகாரத்தில் மேலும் அனலை கிளப்பி உள்ளது.