பேக்கரிக்குள் புகுந்த நபர் பணத்தை திருடும் சிசிடிவி காட்சி.!

Subscribe our YouTube Channel

இந்தியாவின் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் உள்ள பேக்கரியில் மர்மநபர் ஒருவர் பணத்தை திருடும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி, தற்போது வெளியாகியுள்ளது.சங்ககிரியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.

இவர் இளம்பிள்ளை பகுதியில் sri vari bakery என்ற பெயரில் பேக்கரி நடத்தி வருகிறார்.வழக்கம் போல நேற்று காலை பேக்கரியை திறந்து உள்ளே சென்ற அவர் பணம் களவாடப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து சிசிடிவியை ஆராய்ந்த போது முகக்கவசம் அணிந்தபடி அங்கு வரும் மர்ம நபர் பணத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.