பெண்களிடம் அத்துமீறிய காவல் ஆய்வாளருக்கு கட்டாய பணி ஒய்வு வழங்கி டிஐஜி அதிரடி உத்தரவு..!

Subscribe our YouTube Channel

திருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன்.திருச்சி பொன்மலை மற்றும் பெரம்பலூர் டவுன் மற்றும் திருச்சி சிறுகனூர் ஆகிய இடங்களில் காவல் ஆய்வாளராக பணியாயாற்றியவர் மணிவண்ணன்.

தன்னிடம் புகார் அளிக்க வரும் பெண்களின் செல்போன் இலக்கத்தைவாங்கி கொள்ளும் இவர் நள்ளிரவுகளில் விசாரணை என்ற பெயரில் வரம்பு மீறி பேசுவது இவரின் வழக்கமாக இருந்துள்ளது.இவருக்கு ஒத்துழைக்காத பெண்களுக்கு தொல்லை கொடுத்துள்ளார்.மேலும் புகாருக்குள்ள நபர்களுக்கு சாதகமாக வழக்கை முடித்து வைப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

பெண் காவலர்களிடம் வக்ரமாக பேசுவது என இவர் மீது பல புகார்கள் வந்துள்ளன.இந்நிலையில்,அண்மையில் சிறுகனூர் காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க சென்ற பெண்ணிடம் செல்போன் நம்பரை வாங்கிய மணிவண்ணன் நள்ளிரவில் வக்கிரமாக பேசியுள்ளார்.

மேலும் புகார் கூறிய நபர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பாதிக்க பட்ட பெண் அப்போதைய திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் நேரடியாக புகார் கொடுத்துள்ளார்.இதனை தொடர்ந்து அவர்மிது போடப்பட்ட புகாரை விசாரித்த டிஐஜி ஒரு பெண்ணிடம் மட்டுமல்ல பல பெண்களிடம் இவ்வாறு செயல்பட்டு வந்ததை கண்டறிந்தார்.

காவல் ஆய்வாளர் மணிவண்ணன் செய்த தப்பு உண்மை என தெரிந்ததும் ஜடந்த ஜூன் 1ம் திகதி காவல் பணியிலிருந்து கட்டாய ஒய்வு அளிக்கப்பட்டது.இந்நிலையில் கடந்த 30ம் திகதி டிஐஜி பாலகிருஷ்ணன் மாற்றலாகி சென்றுவிட்டதால் கட்டாய ஓய்விலிருந்து தப்பி விடலாம் என எண்ணியிருந்தார் மணிவண்ணன்.

தொடர்ந்து சிறுகனூர் காவல்நிலையத்துக்கு பணிக்கு சென்ற மணிவண்ணனிடம் கட்டாய பணி ஒய்வு உத்தரவின் நகல் வழங்கப்பட்டது.காவல் ஆய்வாளர் மணிவண்ணன் ஒய்வு பெற இன்னும் 6 ஆண்டுகள் இருக்கும் நிலையில் பெண்களுக்கெதிரான வன்முறையிலீடுபட்டதால், கட்டாய பணி ஒய்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.