கொரோனாவால் நடந்த கொடுமை !! திருமணம் நிகழ்ந்து மறுநாள் மணமகன் உயிரிழப்பு !! நிகழ்வில் பங்கேற்ற 100 பேருக்கு கொரோனா தொற்று !

Subscribe our YouTube Channel

பீகாரில் திருமணம் முடிந்த மறுதினமே மணமகன் இறந்ததுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரனா தொற்று ஏற்பட்ட சோகமான சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது. டெல்லி குர்க்கிராமில் வேலை செய்து வந்த இளைஞன் ஒருவரின் திருமணம் பாட்ணாவிலுள்ள பார்லிக் என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்கு முதல் நாள் கடும் வயிற்றுப்போக்காலும் சோர்வாலும் அவதிப்பட்ட அவருக்கு பாட்ணா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெற்றோரின் வற்புறுத்தலினால் திருமண சடங்கில் கலந்து கொண்ட அவர் மறுநாளே உயிரிழந்தார்.

ஆனால் குடும்பத்தினர் உடனடியாக இறுதிச் சடங்குகளை செய்தமையினால் கொரனா சோதனை செய்ய இயலவில்லை . தகவலறிந்த மவட்ட நிர்வாகம் நடத்திய சோதனையில் திருமண மற்றும் மரண சடங்கி கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரனா தொற்று உறுதியாகியுள்ளது.