நடுரோட்டில் கள்ள காதலியுடன் சென்ற கணவனுடன் ரகளையில் ஈடுபட்ட மனைவி.!அபராதம் விதித்த பொலிசார் .!

Subscribe our YouTube Channel

மும்பையில் கணவனுடன் காரில் வேறொரு பெண் சென்றதை பார்த்த மனைவி தெருவிலேயே அவர்கள் சென்ற வாகனத்தை நிறுத்தி,கூச்சல் போட்டு ரகளையில் ஈடுபட்டார்.இவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

தன் கணவனுக்கும் அந்த பெண்ணுக்கும் தவறான உறவு இருப்பதாக கூறி கூச்சலிட்ட மனைவி அவர்கள் சென்ற கார் கண்ணாடியையும் உடைக்க முற்பட்டார்.பின் காரின் முன்பகுதியில் ஏறி அமர்ந்து கூச்சலிட்ட அவர் கணவனை வெளியே வரும்படி ஆர்ப்பாட்டம் செய்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின் மெதுவாக நகர்ந்து சென்ற காரை மடக்கிப் பிடித்த மனைவி அவர்களை தாக்கியதாகவும் இதனால் மூன்று போரையும் தனித்தனியாக காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.