Subscribe our YouTube Channel
பின்னர் அசிலாவை தஞ்சாவூருக்கு அழைத்து வந்து வீட்டில் வாழ வைத்தவர் , தஞ்சை திருச்சி என இரு மனைவிகளுடனும் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகின்றது. தற்போது காதல் மனைவி அசிலாவின் நடவடிக்கை பிடிக்காமல் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார் ஜோசப்.
இந்நிலையில் கடந்த 25 ம் திகதி ஜோசப் சென்ற காரை பின் தொடர்ந்து சென்ற மர்ம கும்பல் ஒன்று ஜோசப்பின் காரினை பின் தொடர்ந்து சென்ற மர்ம கும்பல் ஒன்று அவரை அரிவாளால் ஓட ஓட விரட்டி கண்மூடித்தனமாக வெட்டிக் கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் கொலையாளிகளை தேடிவந்த நிலையில் ஐந்து வழக்கறிஞர்களுடன் காவல் நிலையத்தில் ஆயரான அசிலா தனக்கும் கணவர் கொலைக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என நாடகமாடினார்.
பின்பு பெண் பொலிசார் மூலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஜோசப்பின் கொலைக்கான மர்மம் தெரியவந்தது. 2016 ம் ஆண்டு ஜோசப் வெளிநாடு சென்ற பின்னர் வீட்டில் வீட்டில் தனியாக இருந்த அசிலா பொழுது போக்காக முகநூலினை திறந்து அதில் பல இளைஞர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
பின்னர் அவர்களினை வீட்டிற்கு அழைத்து தனது தனிமையைப் போக்கியுள்ளார். அதுமட்டுமின்றி ஜோசப் வங்கிக் கணக்கு வைத்திருந்த வங்கியில் மேலாளரை தனது வசிய வலையில் வீழ்த்திய அசிலா ஜோசப்பின் வங்கிக் கணக்கில் இருந்த முந்நூறு சவரன் நகை , பணம் மற்றும் கோடிக்கணக்கான சொத்தக்களை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்தத் தகவலை நண்பர்கள் மூலம் அறிந்த ஜோசப் கடந்த 2018 ம் ஆண்டு குவைத்திலிருந்து தஞ்சை திரும்பியுள்ளார். அசிலாவின் தவறான உறவு தொடர்பாக உருவான தகறாரில் அவரைவிட்டு பிரிநதுள்ளார் . இதற்கு முன்னர் பாஸ்போர்ட் மோசடி வழக்கில் சிக்கிய அசிலாவிற்கு சில வழக்கறிஞர்களின் அறிமுகம் கிடைத்தது .
அவர்கள் மூலம் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜோசப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . பின் 2019 ம் ஆண்டு நீதி மன்றத்தில் மோசடி வழக்ககை தொடர்ந்த வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் அசிலாவிடமிருந்து தனது சொத்துக்களை மீட்க சட்டநடவடிக்கையைத் தீவிரபபடுத்தியதாக கூறப்படுகின்றது.
இதனால் தான் அபகரித்த சொத்துக்கள் மற்றும் பணம் கைமீறிப் போய்விடுமோ என்ற பயத்தில் கணவரை கொலை செய்ய திருச்சியிலிருந்து 10லச்சம் கொடுத்து கூலிப்படைகளை வைத்து ஜோசப்பை தீர்த்துக் கட்டியது வெளிவந்துள்ளது.
குவைத்திலிருந்து அழைத்து வந்து ஆடம்பர வாழ்க்கை தந்த காதல் கணவனை மறந்து முகநூலில் பழக்கமான சீசன் நண்பர்களை நம்பி இப்போது கம்பி எண்ணும் நிலைக்கு வந்துள்ளார் அசிலா.