கணவனை தாக்கிய எஸ்.ஐ க்கு கன்னத்தில்’பளார்’விட்ட மனைவி.!கொடுக்கல் வாங்கல் பஞ்சாயத்தே காரணம்.!வீடியோ இணைப்பு.

Subscribe our YouTube Channel

விழுப்புரம் மாவட்டம் அரசூரை அடுத்த ஆனந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முத்துராமன்.இவருக்கும் கட்டிட ஒப்பந்தக்காரரான சந்திரபோஸ் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் காரணமாக தகராறு ஏற்பட்டது.இது தொடர்பாக திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் சந்திரபோஸ்.

புகார் சம்மந்தமாக விசாரிக்க மற்றொரு பொலீசுக்காரரை துணைக்கு அழைத்துக்கொண்டு சந்திரபோஸ் உடன் முத்துராமன் வீட்டுக்கு சென்றார் உதவி ஆய்வாளர் தங்கவேலு.அச்சமயம் முத்துராமன் போதையில் வீட்டில் படுத்திருந்தார்.அவரை எழுப்பிய உதவி ஆய்வாளர் தங்கவேலு புகார் சம்மந்தமாக விசாரணை நடத்தியதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.

ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் முத்துராமனை அடித்ததில் அவரின் மூக்கு உடைந்து இரத்தம் கொட்டியது.இதனால் காவலரின் இருசக்கர வாகனத்தை எடுக்க விடாமலும் அவரின் செல்போனையும் பறித்தார் முத்துராமன்.இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் தங்கவேலு அங்கிருந்து செல்ல முற்பட்டார்.

உடனே முத்துராமனின் மனைவி சாவியை பறித்து கணவனை அடித்ததற்கு நியாயம் கேட்டார்.அதோடு உதவி ஆய்வாளர் தங்கவேலுவின் கன்னத்திலும் ‘பளார் ‘என ஒரு அறையும் விழுந்தது.இதனால் இருசக்கர வாகனத்தை விட்டு இறங்கிய தங்கவேலு,தனது செல்போன் மூலம் கூடுதல் பொலிஸை வரவழைத்தார்.இதற்குள் அவரது இரு சக்கர வாகனத்தையும் இளைஞர்கள் மறைத்து வைத்தனர்.

தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு நிலவியது.மேலும் கூடுதல் பொலிஸாருடன் சென்ற டி.எஸ்.பி.நல்லசிவம் காவல் ஆய்வாளர் பாண்டியன் ஆகியோரை சிறை பிடித்தனர்.அங்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பொலிசாரை மீட்டனர்.

இந்நிலையில் உதவி ஆய்வாளர் தாக்கியதில் காயமடைந்த முத்துராமன் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.