சுவிஸில் புலியால் கொல்லப்பட்ட பெண்..!வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி.!

Subscribe our YouTube Channel

சுவிட்ஸர்லாந்து நாட்டின் சூரிச் மாநிலத்தில்,வனவிலங்கு ஒன்று பணியாளரை கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை மதியம் சுமார் 1மணியளவில் இரினா என்ற புலியே காப்பாளரை தாக்கியுள்ளது.

உயிரிழந்த பணியாளர் சுமார் 55 வயது மதிக்கத்தக்கவர். உயிரிழந்த பெண் காப்பாளரை காப்பாற்ற மற்ற பணியாளர்கள் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.இதனால் அச்சமடைந்த பார்வையாளர்கள் எச்சரிக்கை மணியை அடித்தனர்.

அதன் பின் வனவிலங்கு ஊழியர்கள் அனைவரும் துரிதமாக செயல்பட்டு புலியை அப்புறப்படுத்தினர். அதிக காயங்களால் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.குறித்த பணியாளர் பல ஆண்டுகளாக அந்த வனவிலங்கு பூங்காவில் பணியாற்றியவர் எனவும் புலிக்கு சிறுவயது என்பதால் அது தன் இயல்பு குணத்தை காட்டியிருக்கலாம் என பூங்கா நிர்வாகம் தெரிவித்தது.

இக்காட்சியை நேரில் பார்த்த சக பணியாளர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.