கடலில் இருந்து சுறா மீனை தூக்கிச் செல்லும் அதிசய பறவை.!இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

Subscribe our YouTube Channel

அமெரிக்காவின் மைர்டில் கடற்கரை ஓரத்தில், பிரமாண்டமான அளவில் உள்ள ஒரு பறவை, பெரிய அளவிலான சுறா மீனை கவ்விச் செல்கிறது.இது அங்கிருந்தவர்களால் படமாக்கப்பட்டது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சுறா மீனையே தூக்கும் அளவுக்கு பெரிய பறவையா என வியப்பில் இணையத்தில் விவாதம் செய்து வருகின்றனர்.

இந்த வீடியோவை, கெல்லி புர்பாஜ் என்பவர் ‘கழுகா.. பருந்தா..மைர்டில் கடற்கரையில் ஒரு சுறாவைப் பிடித்தச் செல்லும் பறவை எது’என்ற கேள்விகளுடன் இந்த வீடியோவை தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது வரை, 16.5 லட்சத்துக்கும் மேற்பட்டோரால் பார்வையிடப்பட்டுள்ளது.
வீடியோவைப் பார்த்த பலரும் வியப்பில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.