நடிகர் மகேஷ்பாபு விடுத்த கிரீன் இந்தியா சவாலை ஏற்று மரக் கன்றை நட்டார் இளைய தளபதி விஜய்.!

Subscribe our YouTube Channel

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு தனது 45வது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று ஒன்றை நட்ட நடிகர் மகேஷ்பாபு #GreenIndiaChallenge-ல் பங்கேற்று அந்த challege ஐ நடிகர் விஜய்கும் விடுத்திருந்தார்.தொடர்ந்து மரக்கன்று நடும் வீடியோவினை தனது Twitter ல் பகிர்ந்த மகேஷ்பாபு அவர்கள்,எனது பிறந்த நாளைக் கொண்டாட இதை விடச் சிறந்த வழி எதுவும் இருக்க முடியாது. நான் #GreenIndiaChallenge சவாலை ஜூனியர் என்.டி.ஆர், நடிகர் விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுக்கிறேன்.இந்த முயற்சி எல்லைகளைக் கடந்து தொடரட்டும். இந்த முயற்சிக்கு ஆதரவு தரும்படி உங்கள் அனைவரையும் வேண்டிக் கேட்கிறேன். பசுமையான உலத்தை நோக்கி இது ஒரு அடி”என பதிவிட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து நடிகர் விஜய் மகேஷ்பாபுவின் சாலெங்கே ஐ ஏற்று தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.தான் மரக்கன்று நடும் புகைப்படங்களை twitter பதிவிட்டிருக்கும் நடிகர் விஜய் மகேஷ் பாபுவின் ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு,‘இது உங்களுக்காக மகேஷ் பாபு.பசுமை இந்தியாவுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும். பாதுகாப்பாக இருங்கள்” என கூறியுள்ளார்.