‘உங்கள் தந்தை எப்படி முதல்வரானார் என்பது பலருக்கும் தெரியும்’ஆதித்ய தாக்கரேவை விமர்சித்து சரமாரியாக கேள்விகளை முன்வைத்த கங்கனா ரணாவத்.

Subscribe our YouTube Channel

பாலிவுட்டின் இளம் நடிகரான சுஷாந்த் சிங் கடந்த மாதம் 14ம் திகதி அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியது.ஆனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பல சந்தேக கருத்துக்களை வெளியிட்டதையடுத்து காவல்துறையினரால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.சுஷாந்தின் மரண வழக்கு தொடர்பாக மகாராஷ்டிரா மற்றும் பீகார் அரசுகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கு வருத்தம் தெரிவித்த ஆதித்ய தாக்கரே, தங்கள் குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட மாட்டேன் என விளக்கம் அளித்திருந்தார். தன் மீது பழிபோடுவது மோசமான அரசியல் என்றும்,சுஷாந்த் வழக்கை அரசியலாக்க தொடங்கி விட்டார்கள் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஆதித்ய தாக்கரேவின் கருத்துக்கு ட்விட்டரில் அவர் பதில் அளித்துள்ளார். அவரது தந்தை உத்தவ் தாக்கரே எப்படி முதல்வரானார் என்பது பற்றி அனைவருக்கும் தெரியும் என விமர்சித்துள்ளார்.

மேலும் அவரது ட்விட்டர் பதிவில், ‘மோசமான அரசியல் பற்றி யார் பேசுகிறார் என்பதை பாருங்கள். உங்கள் தந்தைக்கு எப்படி முதல்வர் பதவி கிடைத்தது? சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான சில கேள்விகளுக்கு உங்கள் தந்தையை பதிலளிக்கச் சொல்லுங்கள் என குறிப்பிட்டு சில கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.

  1. ரியா எங்கே?
  2. சுஷாந்த மரணம் குறித்து மும்பை போலீசார் ஏன் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை?
  3. சுஷாந்த் உயிருக்கு ஆபத்து என கடந்த பிப்., மாதம் புகார் அளிக்கப்பட்ட போதும், அவர் உயிரிழந்த பின், போலீசார் தற்கொலை என கூறியது ஏன்?
  4. சுஷாந்த் உயிரிழந்த வாரத்தில், அவர் யாரிடம் பேசினார் என்ற லிஸ்ட் எங்கே?
  5. ஐபிஎஸ் அதிகாரி வினய் திவாரி தனிமைப்படுத்தி வைத்திருப்பது ஏன்?
  6. சுஷாந்த மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மறுப்பது ஏன்?
  7. சுஷாந்த் பணத்தை ரியாவும், அவரது குடும்பத்தினரும் ஏன் கொள்ளையடித்தார்கள்?என தனது கேள்விகளை முன்வைத்துள்ளார் நடிகை கங்கனா ரணாவத்

இவர் சுஷாந்த் மரணம் தொடர்பாக, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தொடக்கம் முதலே பல கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். குறிப்பாக பாலிவுட் திரையுலகில் இருக்கும் பிரச்னைகள் தொடர்பாக அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.