மது போதையில் கொடுமை செய்த கணவனைக் கொன்று நன்கு கழுவி உப்பு போட்டு பிரிட்ஜில் வைத்த மனைவி.!

Subscribe our YouTube Channel

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வசித்து வருபவர்கள் அலெக்சாண்டர் யுஷ்கோ மற்றும் மெரினா குஹா தம்பதிகள். இவர்களுக்கு 2 வயதில் குழந்தையும் உண்டு. அலெக்சாண்டர் யுஷ்கோ ரஷ்யாவின் பிரபல பாப் இசை பாடகர் ஆவார்.ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட இவர்மது பழக்கத்துக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில், உலகம் வேண்டும் கொரோனா பரவளின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்த அலெக்சாண்டர் யுஷ்கோதினமும் மது போதையில் மனைவியை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன அழுத்தம் அடைந்த குஹா கணவனை கொன்று விடலாம் என முடிவு செய்துள்ளார்.தொடர்ந்து குழந்தையின் கண் முன்னே கத்தி, சுத்தியல், ரம்பம் உள்ளிட்டவற்றைக் கொண்டு கணவரின் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.வெட்டிய உடல் பாகங்களை வாஷிங் மெஷினில் போட்டு நன்கு கழுவி உப்பு போட்டு, ஃபிரிட்ஜில் வைத்துள்ளார்.

வீட்டை நன்றாக சுத்தம் செய்து விட்டு வழக்கம் போல் தனது வேலைகளை கவனிக்க தொடங்கியுள்ளார்.இந்நிலையில் அலெக்சாண்டருக்கு அவரது நண்பர்கள் போனில் அழைத்துள்ளனர் .அவர் பதிலளிக்காததால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் பொலிசில் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து வீட்டிற்கு விரைந்து வந்த பொலிசார் மனைவியான குஹாவிடம் விசாரணை நடத்தினர்.அதனை தொடர்ந்து அவர் கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுடார்.மேலும் போதையில் தினமும் தொல்லை செய்ததால் அவரை கொலை செய்ததாக வாக்கு மூலம் கொடுத்துள்ளார் மனைவி.