அமெரிக்காவில் ஏற்பட்ட பாரிய காட்டுத் தீ.!கட்டுப்படுத்தும் முயற்சியில் ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள்.!

Subscribe our YouTube Channel

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பியூமன்ட் நகருக்கு அருகில் உள்ள செர்ரி பள்ளத்தாக்கில் பாரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக 20,516 ஏக்கர் வரை பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.லொஸ் ஏஞ்சலேஷுக்கு கிழக்கே ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வந்தனர்.அவர்களை வீடுகளில் இருந்து வெளியேற்றிய 1300க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஹெலிகாப்டர்கள் மற்றும் நீர்கொட்டும் விமானங்களின் உதவியுடன் கடந்த வெளிக்கிழமை முதல் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் எடுப்பற்று வருகின்றனர்.கரடு முரடுகள் நிறைந்த செங்குத்தான பகுதியில் காட்டு தீ பரவியுள்ளதால் போக்குவரத்துக்களுக்கு பெரிதும் சிரமங்கள் நிலவுகின்றன.