ஆந்திர முதல்வரை போல் நல்லாட்சி அமைத்து தமிழகத்தை காப்பார்-மதுரை விஜய் இரசிகர்களின் புதிய போஸ்டர்.!

Subscribe our YouTube Channel

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் கிரீன் இந்தியா சவாலை ஏற்று மரக்கன்றை நாட்டார் இளைய தளபதி விஜய்.அதாவது கடந்த வரம் தனது பிறந்த நாளை முன்னிட்டு கிரீன் இந்தியா challenge என்ற பெயரில் மரக்கன்றை நட்டு இளைய தளபதி விஜய் உள்ளிட்ட சில பிரபலங்களுக்கும் இந்த அவளை விடுத்தார்.இதனையடுத்து விஜய்,ஸ்ருதிஹாசன் ஆகியோர் மரங்களை நட்டு புகைப்படங்களை அவர்களது Twitter பக்கத்தில் வெளியிட்டனர்.

இதனை இளைய தளபதியின் இரசிகர்கள் உற்சாகமாக இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.இந்நிலையில் மதுரையில் இளைய தளபதி விஜய் இரசிகர்கள் சிலர் வித்தியாசமான முறையில் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர்.அதில் நேற்று ஆந்திர நடிகரின் வேண்டுகோளை ஏற்று மரக்கன்றை நட்டார்,நாளை ஆந்திர முதல்வரை போல் நல்லாட்சி அமைத்து தமிழகத்தை காப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.