ஆந்திராவில் ஆதரவற்ற 3 குழந்தைகளை தத்தெடுத்த நடிகர் சோனு சூட்.!

Subscribe our YouTube Channel

திரைப்படங்களில் வில்லனாக அறியப்பட்ட சோனு சூட் கொரோனா ஊரடங்கு காரணமாக இன்னல்களை சந்திக்கும் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இவர் ஆதரவற்ற 3 குழந்தைகளை தத்தெடுப்பதாக அறிவித்துள்ளார்.இவர் சமீபத்தில் புனே சிலம்பம் மூதாட்டிக்கு தற்காப்பு பள்ளி அமைத்து கொடுத்தார்.ஆந்திராவில் மகள்களை ஏர் பூட்டி வயல் உழுத ஏழை விவசாயிக்கு டிரெக்டெர் வாங்கி கொடுத்தார்.பணி நீக்கம் செய்யப்பட்ட பட்டதாரி பெண்ணுக்கு வேலை நியமனம் செய்தது.

3 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தது என இவரின் உதவிகளை அடுக்கி கொண்டே போகலாம்.இந்நிலையில் தற்போது,ராஜம் கர்ணம் என்பவர் அவரது Twitter பக்கத்தில்,ஆந்திராவின் புவனகிரியைச் சேர்ந்த 3 ஆதரவற்ற குழந்தைகளின் புகைப்படத்தை பதிவிட்டு உதவி கோரியிருந்தார். இதற்கு சோனு சூட்,இவர்கள் ஆதரவற்றவர்கள் இல்ல.இனிமேல் என் பொறுப்பில் இருப்பார்கள் என பதிவிட்டுள்ளார்.இப்பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.