அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம் நடந்தது உண்மையா.?அன்று என்ன நடந்தது.?நடிகர் ஷாம் விளக்கம்.!

Subscribe our YouTube Channel

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடிகர் ஷாம் நண்பர்களுடன் சேர்ந்து சூதாடுவதாக செய்திகள் பரவியது.இந்த சம்பவம் குறித்து விரிவான விளக்கத்தை நடிகர் ஷாம் பிரபல ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,நண்பர்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து போக்கர் விளையாடி விட்டு, மதிய, இரவு உணவு முடித்து அவரவர் வீடுகளுக்கு செல்வது வழக்கம். அப்படித் தான் இந்த ஊரடங்கிலும் அனைவரும் சந்திப்பது என முடிவு செய்து அத்துடன் விளையாடலாம் என முடிவு செய்தோம்.

லாக்டவுனில் வெளியில் செல்ல முடியாத காரணத்தினால் வீட்டிலேயே சந்தித்தோம்.இதனை சூதாட்டம் நடப்பதாக கூறி தவறான தகவல்களை பரப்பி விட்டார்கள்.நுங்கம்பாக்கம் அதிகாரிகள் வந்து பரிசோதித்த பின்னர் கூட,சந்தேகப்பட்ட படி எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்கள்.

அதற்காக ஒரு கையெழுத்தும் கேட்டார்கள்.அதனால் நானும் என் நண்பர்களும் சென்று கையெழுத்து போட்டு வந்தோம். இந்த கொரோனா நேரத்தில் இது போன்ற சந்திப்புகளை தவிர்க்கலாம் என அதிகாரிகள் கூறினார்கள்.மேலும்,நான் அடிப்படையில் business family யில் இருந்து திரைப்பட துறைக்கு வந்தேன்.

எனக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். இதனால் நான் சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபடுவதற்கானது ஒன்றும் இல்லை.நண்பர்களை சந்தித்த பின் எவ்வளவு நேரம் தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருப்பது? வழக்கமாக கிரிக்கெட் உள்ளிட்ட எதாவது விளையாடுவோம்.

ஆனால் வெளியில் போக முடியாத காரணத்தால் போக்கர் அனைவரும் சேர்ந்து போக்கர் விளையாடினோம்.அதில் ஜெயிச்சா, நான் சாப்பிட்டதுக்கு நீ பில் கட்டணும், என்பது போன்ற அளவில் தான் இந்த நட்பு ரீதியான விளையாட்டு இருந்தது.இதில் பணப் பந்தயமோ, சூதாட்டமோ இல்லை.என தெரிவித்துள்ளார்.