அவுஸ்ரேலியாவின் ரம்மியமான தலைகீழ் நீர்விழ்ச்சி-இயற்கையின் அதிசய காட்சி.!

Subscribe our YouTube Channel

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகருக்கு அருகில் உள்ள ராயல் தேசிய பூங்காவனது இயற்கையின் எழிலுடன் மிக இரம்மியமாக காட்சியளிக்கிறது.அந்த பூங்காவில் இயற்கையான தென்றலும் மரங்களும் புடை சூழ பறவைகள் விலங்குகள் மற்றும் பூச்சிகளின் ஆகியவற்றின் சத்தத்துடன் இயற்கையின் அற்புதங்களில் ஒன்றாக நீர்விழ்ச்சி ஒன்று உள்ளது.இந்த அருவியானது புவியீர்ப்புக்கு மாறாக,மேல்நோக்கி பாய்கிறது.மலையின் கீழ்ப்பகுதியில் இருந்து காற்று அதீத வேகத்துடன் மேலெழும்புவதால் நீர்வீழ்ச்சி மேல் நோக்கி செல்வதாக கூறப்படுகிறது.இங்குள்ள காற்றின் வேகம் மணிக்கு சுமார் 70 கி.மீ ஆகும்.

இவ்வளவு வேகத்தில் காற்று அடிக்கும் போது நீர்வீழ்ச்சியின் அருகில் யாரும் செல்ல முடியாது. இது தொடர்பாக அறிவியலாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.இது குறித்து வானிலை ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது,மலைக்கு அருகில் பெருங்கடல் உள்ளது.இந்தக் கடலில் இருந்து வரும் பலத்தக் காற்று மலையின் கீழ்ப்பகுதியில் மோதி அதே வேகத்தில் மேலெழுகிறது.இவ்வாறு எழும் போது, காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், நீர்வீழச்சியும் மேல் நோக்கி பாய்கிறது என கூறியுள்ளார்.